வெள்ளி, 12 டிசம்பர், 2014
வியாழன், 11 டிசம்பர், 2014
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் தாதாபுரம் கிராமம் அமைந்துள்ளது . இவ் வூரின் சிறப்பு ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார் மூன்று சிறப்பான கற்கோவில்களை கட்டயுள்ளார் . அவைகள் 1) மாணிக்க ஈஸ்வரர் திருக் கோவில் 2) கரிவரதராஜ பெருமாள் சுவாமி திருக்கோவில் மற்றும் 3) ஜைனர்களின் திருகோயில் ஆகும். இவற்றுள் ஜைனர்களின் கோவில் தற்போது காணக்கிடைக்கவில்லை. மற்ற இரு கோவில்களான மாணிக்க ஈஸ்வரர் திருக் கோவில் மற்றும் கரிவரதராஜ பெருமாள் சுவாமி திருக்கோவிலும் உள்ளன . இக் கோவில்கள் 1000 ஆண்டுகளை கடந்த கோவில்கள் ஆகும் . இக்கோவில்களில் பல்வேறு கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன .
மாணிக்க ஈஸ்வரர் திருக் கோவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீர் செய்து புனரமைக்கப்பட்டது.
தற்போது கரிவரதராஜ பெருமாள் சுவாமி திருக்கோவில் அதன் அறங்காவலர் திரு குருவெங்கடரமனையா மற்றும் தாதாபுரம் வாழ் ஆன்மிக அன்பர்களின் பெரு முயற்சியால் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை உதவியுடன் சீரமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)